கோபத்தில் தாய் வீட்டுக்கு சென்ற மனைவி..... ஆத்திரத்தில் மாமியாரை கத்தியால் குத்தி கொலை மருமகன்....

 

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் அருகே உள்ள மண்ணப்பன் குளம் என்ற பகுதியை சேர்ந்த சங்கர் என்பவருடைய மகன் வீரக்குமார். இவரும் அதே பகுதியை சேர்ந்த ரஞ்சிதாவும் கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். வீரக்குமார் தள்ளுவண்டி ஓட்டி கூலி வேலை செய்து குடும்பத்தை நடத்தி வருகின்றார். இதனிடையே வீரக்குமாருக்கும் மனைவி ரஞ்சிதாவுக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்ட நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு இவர்களுக்கு இடையே மீண்டும் பிரச்சனை ஏற்பட்டதால் ரஞ்சிதா தனது கணவரிடம் கோபித்துக் கொண்டு தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.

நேற்று மதியம் 2 மணி அளவில் அதிராம்பட்டினம் வண்டிப்பேட்டை ரோடு பகுதியில் ரஞ்சிதாவும் அவருடைய தாயார் சாந்தியும் நடந்து சென்று கொண்டிருந்தபோது அங்கு வந்த வீரக்குமாருக்கும் அவரது மனைவி ரஞ்சிதா மற்றும் மாமியார் ஆகியோருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த வீரக்குமார் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து தனது மனைவி மற்றும் மாமியாரை குத்தியுள்ளார்.

இதனால் படுகாயம் அடைந்த சாந்தியை அக்கம் பக்கத்தினர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். கத்திக்குத்தில் படுகாயம் அடைந்த ரஞ்சிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Post a Comment

0 Comments