தமிழகம் முழுவதும் புற்றுநோய் ஸ்கிரீனிங் சென்டர் தொடங்கப்படும் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
தமிழகத்தில் மக்களின் வசதிக்காக அரசு சார்பில் ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் மக்கள் பலரும் பயனடைந்து வருகிறார்கள். குறிப்பாக அரசு மருத்துவமனைகளில் தனியார் மருத்துவமனைகளுக்கு நிகரான சிகிச்சை வழங்க வேண்டும் என்பதற்காக அரசு பலகட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.இந்த நிலையில் தமிழகம் முழுவதும் புற்றுநோய் ஸ்கிரீனிங் சென்டர் தொடங்கப்படும் என்று அமைச்சர் சுப்பிரமணியன் கூறியுள்ளார். சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், புற்றுநோயால் மக்கள் அதிகம் பாதிக்கப்படுவது உலக நாடுகளை கவலையடைய செய்துள்ளது என தெரிவித்தார். மேலும் புற்றுநோய் தாக்கத்தை ஆரம்ப நிலையிலேயே கண்டறியும் விதமாக அரசு சார்பில் மாநிலம் முழுவதும் புற்றுநோய் ஸ்கிரீனிங் சென்டர் உருவாக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
No comments