• Breaking News

    ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தி.மு.க.வினருக்கு தொடர்பு உள்ளது - அண்ணாமலை

     

    பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் கொலை வழக்கில் தி.மு.க.,வினருக்கு தொடர்பு உள்ளது என தமிழக பாஜ., தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.

    திருச்சியில் நிருபர்கள் சந்திப்பில் அண்ணாமலை கூறியதாவது: பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் கொலை வழக்கில் தி.மு.க.,வினரும் சிக்கி உள்ளனர். திமுக நிர்வாகிகள் அருள், கலை மா ஶ்ரீனிவாசன் மற்றும் சதீஷ் ஆகிய 3 பேருக்கு தொடர்பு உள்ளது. இதனால் உண்மையை மூடி மறைக்க போலீசார் முயற்சி செய்கின்றனர்.

     வழக்கை அவசர கதியில் முடிக்க காரணம் என்ன? ரவுடி திருவேங்கடம் என்கவுன்டர் தொடர்பாக பல கேள்விகள் எழுகிறது.சரண் அடைந்தவரை அவசரமாக என்கவுன்டர் செய்தது ஏன்?. போலீஸ் காவலில் இருந்தவருக்கு துப்பாக்கி எப்படி வந்தது. சரண்டரான ஒருவர் எப்படி தப்பிக்க முயற்சிப்பார்?. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை அரசு முறையாக விசாரிக்கவில்லை.

     தவறு செய்தவர்களை சட்டரீதியாக தண்டிக்க வேண்டும். அவசர அவசரமாக என்கவுன்டர் என்ற பெயரில் உயிரை பறிக்க வேண்டிய அவசியம் என்ன?. இவ்வாறு அண்ணாமலை கூறினார்.

    No comments