திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியில் ஈஸ்வரன் என்பவர் அவருடைய மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் சம்பவ நாளன்று ஈஸ்வரன் அவரது குடும்பத்தினருடன் வீட்டிற்கு வெளியே அமர்ந்து கொண்டிருந்தார். அப்போது அங்கே வந்த 2 மர்ம நபர்கள் ஜோசியம் பார்ப்பவர்கள் போல் வேடம் அணிந்திருந்த நிலையில், அவர்கள் ஈஸ்வரன் வீட்டிற்கு சென்று ஜோசியம் பார்த்தனர்.
இதனைதொடர்ந்து அந்த மர்ம நபர்கள் ஈஸ்வரன் மகனுக்கு ஜோசியம் பார்க்கும் போது அவர்கள் அவனுக்கு தோஷம் இருப்பதாக கூறினர். பின்பு தோஷத்தை கழிப்பதற்கு வீட்டில் உள்ளவர்களிடம் தங்க நகைகளை கொண்டு வருமாறு கூறியுள்ளனர். அதன்படி ஈஸ்வரன் மனைவி அவரிடம் உள்ள தங்க நகைகளை எடுத்துக்கொண்டு அந்த மர்ம நபர்களிடம் கொடுத்துள்ளார். அந்த மர்ம நபர்கள் தங்க நகைகளை வைத்து தோஷத்தை கழிக்க போவதாக கூறிவிட்டு வீட்டிற்கு வெளியே வந்த நிலையில் அங்கிருந்து திடீரென மயமாகினர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். மேலும் அந்த புகாரின்படி வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இன்றைய கலகட்டத்திலும் கூட ஜோசியத்தை நம்பி தங்க நகைகளை கொடுத்து ஒரு குடுப்பதினார் ஏமாந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
0 Comments