தேனி மாவட்டம் லோயர் கேம்ப் பணிமனை டி என்எஸ்டிசி- ஏஐடியுசி சங்கத் தொழிலாளர்கள் தர்ணா போராட்டம்
தேனி மாவட்டம் லோயர் கேம்பில் உள்ள அரசு போக்குவரத்து பணிமனையில் பணியாற்றும் கிளை மேலாளருக்கு எதிராக தொழிற்சங்கத்தினர் தர்ணா போராட்டம் கூடலூர் அருகே உள்ள லோயர் கேம்பில் இந்த போக்குவரத்து கழகத்தின் பணிமனைஅமைக்கப்பட்டுள்ளது. இங்கு 21பேருந்துகள் செயல்படுகிறது.இந்த போக்குவரத்து பணிமனையில் கடந்த ஐந்து ஆண்டுகளாக ரமேஷ் என்ற கிளை மேலாளர் பணியாற்றி வருகிறார்.
இந்த கிளை மேலாளர் தனது அதிகாரத்தினை துஷ்பிரயோகம் செய்வதாகவும், தொழிற்சங்கங்களை மதிக்காமல் செயல்படுவதாகவும், தொடர்ந்து இங்கு பணியாற்றும் தொழிற்சங்க பணியாளர்களை பல்வேறு இன்னல்களுக்கு உட்படுத்துவதாகவும் கூறி டி என் எஸ் டி சி - ஏ ஐ டி யு சி போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கிளை மேலாளர் தொழிலாளர்களை பாகுபாடு வைத்து நடத்துவதாகவும், தனக்கு ஆதரவாக உள்ள தொழிலாளர்களுக்கு உடனடியாக விடுப்பு வழங்குவது மற்ற பணியாளர்களுக்கு விடுப்ப அளிக்காமல் அவர்களை தொடர்ந்து பணி செய்ய நிர்பந்திப்பது உடல்நிலை குறைபாடு ஏற்பட்டாலும் அந்த பணியாளர்களுக்கு விடுப்பு அளிப்பதில்லை, மேலும் சரியான முறையில் பணி செய்து வந்தாலும் அதற்கு வேலை நேரம் கொடுக்காமல் இருப்பது, ஒரு குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டும் பல்வேறு சலுகைகளை இந்த கிளை மேலாளர் ஒருதலை பட்சமாக வழங்குவதாக புகார்கள் கூறி கண்டன கோஷங்கள் எழுப்பினர்.கிளை மேலாளர் மீது மேலதிகாரிகளிடம் எந்த ஒரு புகார் அளித்தாலும் எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளப்படுவதில்லை என்றும் கோஷங்கள் எழுப்பப்பட்டது.
உடனடியாக இந்த கிளை மேலாளரை மாற்றம் செய்ய வேண்டும், மேலும் போக்குவரத்து பணிமனை மலையடி வாரத்தில் உள்ளதால் விலங்குகள் வரும் அச்சம் உள்ளதால் பணிமனையை சுற்றி காம்பவுண்டு சுவர் எழுப்ப வேண்டும், தொழிலாளர்களுக்கு உரிய அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி இந்த தர்ணா போராட்டம் நடைபெற்றது.
இந்த தர்ணா போராட்டத்தில் டி என் எஸ் டி சி - ஏ ஐ டி யு சி சங்கத்தைச் சார்ந்த லோயர் கேம்ப் பணிமனை தலைவர் அரசமணி நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கினார். மேலும் தேனி மாவட்ட செயலாளர் பெருமாள், கம்பம் சிபிஐ கல்யாண சுந்தரம், கர்ணன், நாச்சிமுத்து, திண்டுக்கல் மண்டல ஏ ஐ டி யு சி பொதுச் செயலாளர் பாஸ்கர், திண்டுக்கல் மண்டல தலைவர் திருப்பதி, ஆகிய ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
No comments