மீஞ்சூர் ஒன்றியம் நந்தியம்பாக்கம் ஊராட்சியில் இலவச கண் பரிசோதனை அறுவை சிகிச்சை முகாம் ஊராட்சி மன்ற தலைவர் கலாவதி தலைமையில் நடைபெற்றது
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட நந்தியம்பாக்கம் ஊராட்சியில் ஊராட்சி மன்றம் மற்றும் எம்.என். கண் மருத்துவமனை மறுவாழ்வு அறக்கட்டளை மாவட்ட கண் பார்வை இழப்பு தடுப்பு சங்கம் இணைந்து இலவச கண் பரிசோதனை அறுவை சிகிச்சை முகாம் நேற்று ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் நடைபெற்றது .
இம்முகாமை ஊராட்சி மன்ற தலைவர் கலாவதி தொடக்கி வைத்தார் .கிராம நிர்வாக அலுவலர் வெங்கடேசன், சென்னை சமூக சேவா சங்க நிர்வாகிகள் பரத்ராஜ் .ஜெயந்தி மற்றும் கண் மருத்துவமனை மருத்துவர்கள் தாரணி, காயத்ரி சதீஷ்குமார், கிருஷ்ணன் ,அவின் ஆகியோர் 210 பேர் கலந்து கொண்ட இந்த முகாமில் பரிசோதனை செய்து மருந்து மாத்திரைகள் வழங்கினார். ஏழு பேருக்கு அறுவை சிகிச்சை செய்ய பரிந்துரை செய்யப்பட்டது பயன் பெற்ற பயனாளிகள் ஊராட்சி மன்ற தலைவருக்கு நன்றி தெரிவித்தனர்.
No comments