பசுமைத்தாயகம் அமைப்பின் சார்பில் கும்மிடிப்பூண்டி பஜாரில் காலநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது..... திரைப்பட இயக்குனர் கௌதம் பங்கேற்பு
திருவள்ளூர் மாவட்ட பசுமைத்தாயகம் அமைப்பின் சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்விற்கு பாமக முன்னால் மாநில துணை பொது செயலாளர் மா. செல்வராஜ் தலைமை தாங்கினார்.
இந்த நிகழ்விற்கு பாமக முன்னாள் மாநில துணைத்தலைவர் துரை ஜெயவேலு, பசுமைத்தாயக பொறுப்பாளர்கள் பத்மநாபன், முத்து, வன்னியர் சங்க மாவட்ட தலைவர் பா. கேசவன், முன்னாள் இளைஞர் அணி செயலாளர் மு.கார்த்திகேயன், மாநில மகளிர் அணி பொறுப்பாளர் சுமோ லதா, முன்னாள் தெற்கு ஒன்றிய செயலாளர் சம்பத், முன்னாள் ஒன்றிய செயலாளர்கள் ஆனந்த், பசும்பத்தாயக பொறுப்பாளர் பிரபு ,நாகராஜ் காணிமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர் .
இந்த நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக திரைப்பட இயக்குனர் கௌதமன் பங்கேற்று காலநிலை மாற்றம் குறித்தும் அதனை பாதுகாக்கும் வழிமுறைகள் குறித்தும் சிறப்புரையாற்றினார்.தொடர்ந்து நிகழ்வை ஒட்டி சுற்றுச்சூழல் பாதுகாப்பு உள்ளிட்டவைகள் குறித்த விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து கும்மிடிப்பூண்டி பஜாரில் நூற்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு திரைப்பட இயக்குனர் கௌதமன், பாமக முன்னாள் மாநில துணை பொது செயலாளர் மா. செல்வராஜ் மரக்கன்றுகளை வழங்கினர்.
மேலும் பசுமைத்தாயகம் அமைப்பின் சார்பில் கும்மிடிப்பூண்டி காவல் நிலைய வளாகத்தில் நிழல் தரும் மரக்கன்றுகள் நடப்பட்டது. நிகழ்வில் கும்மிடிப்பூண்டி காவல் நிலைய இன்ஸ்பெக்டர் வடிவேல் முருகன், மற்றும் போலீசார் உடன் இருந்தனர்.
No comments