• Breaking News

    பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் ராமதாஸ் பிறந்தநாள் விழா மற்றும் பசுமைத் தாயகம் நாள் முன்னிட்டு மாபெரும் கிரிக்கெட் போட்டி


    திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த சின்ன ஒபளாபுரம் மைதானத்தில் பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் மருத்துவர் ராமதாஸ் அவர்களின் பிறந்தநாள் மற்றும் பசுமை தாயகம் நாள் இதனை முன்னிட்டு மாபெரும் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.இப்போட்டியினை விழா ஒருங்கி ணைப்பாளரும் திருவள்ளூர் வட க்கு மாவட்ட முன்னாள் இளைஞர ணி செயலாளர் வழக்கறிஞர் எஸ் டி கே சங்கர் துவக்கி வைத்தார். 

    இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தி னராக பேராசிரியர் சிவப்பிரகாசம், திரைப்பட இயக்குனர் கௌதம், மாநில அமைப்பு செயலாளர் செல் வம், இஸ்ரோ ராஜமணிமாறன், மாவட்ட செயலாளர் பிரகாஷ், மாநிலத் துணைத் தலைவர் துரை ஜெயவேலு, முன்னாள் மாநில துணை பொது செயலாளர் செல்வ ராஜ், முன்னாள் மாவட்ட செயலா ளர் ரமேஷ், முன்னாள் மாவட்ட செயலாளர் குபேந்திரன், மாவட்ட தலைவர் ரவி, மாவட்ட துணைத் தலைவர் சர்க்கரை ரெட்டியார், மாவட்ட பொருளாளர் கஸ்தூரி, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் கே சி சேகர், மாவட்ட செயலாளர் குப்பன், மாவட்ட தலைவர் மருதமலை, மாவட்ட அமைப்பு செயலாளர் மாரி, ஒன்றிய கவுன்சிலர் மணிமேகலை கேசவன், ஒன்றிய கவுன்சிலர் சங்கர், ஒன்றிய செயலாளர் ஜி மணிகண்டன், மாவட்ட அமைப்பு செயலாளர் சுரேஷ், முன்னாள் மாவட்ட இளைஞரணி செயலாளர் கார்த்திக், மற்றும் கட்சியின் மாநில மாவட்ட ஒன்றிய கிளைக் கழக நிர்வாகிகள் மகளிர் அணி பொறுப்பாளர்கள் வன்னியர் சங்க பொறுப்பாளர்கள் சமூக முன்னேற் ற சங்க பொறுப்பாளர்கள் பசுமை த்தாயகம்  விசுவாசிகள் என பலர் கலந்து கொண்டதாக விழா ஒருங் கிணைப்பாளர் சங்கர் தெரிவித்தார்.

    கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெருபவர்களுக்கு முதல் பரிசாக ரூபாய் 50,ஆயிரம் கோப்பை, இரண்டாவது பரிசாக 40 ஆயிரம் கோப்பை,மூன்றாவது பரிசாக30 ஆயிரம் கோப்பை,நான்காவது பரிசாக 20 ஆயிரம் கோப்பை, வழங்கப்படுவதாக தெரிவிக்கப் பட்டது. கிரிக்கெட் போட்டியில் சுற்று பகுதியை சேர்ந்த ஏராள மான கிரிக்கெட் வீரர்கள் ஆர்வத்து டன் கலந்து கொண்டனர்.

    No comments