மதுரையில் ஆம்னி பேருந்து ஒட்டுநரை கைகளை கட்டி தாக்குதல்
சென்னை - நாகர்கோவில் இடையே இயக்கப்படும் ஆம்னி பேருந்தில் ஓட்டுனராக பணியாற்றி வருபவர் சித்திரவதை செய்யப்படும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. ஆம்னி பேருந்து நிறுவனத்திற்கு தெரியாமல் ஒட்டுனர் பயணிகளை ஏற்றி பணம் பெற்றதாக கூறப்படுகிறது.இந்நிலையில், இவ்விவகாரம் ஆம்னி பேருந்து உரிமையாளருக்கு தெரிய வந்ததையடுத்து மதுரையில் உள்ள ஆம்னி பேருந்து அலுவலகத்தில் வைத்து ஓட்டுனர் தாக்கப்பட்டு உள்ளார்.
ஜன்னல் கம்பிகளில் ஓட்டுனரின் கைகளை பின்னால் கட்டி வைத்து நீண்ட நேரம் அடித்து சித்திரவதை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.இதையடுத்து, கைகள் வலிக்குது கைகளை அவிழ்த்து விடுங்கள் என ஒட்டுனர் கதறி அழுதும் ஓட்டுனரை ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் விடவில்லை. இது தொடர்பான தாக்குதல் வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. வீடியோவை ஆதாரமாக வைத்து மனித உரிமை ஆணையமும், தமிழ்நாடு காவல்துறையும் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சக ஓட்டுனர்கள் கோரிக்கை விடுத்தனர்.
No comments