கன்னியாகுமரியில் சுற்றுலா படகு சேவை தற்காலிகமாக ரத்து

 

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே ஒரு சில மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் அருவிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. மேற்கு தொடர்ச்சி மலைகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் குற்றாலம் அருகில் அவ்வப்போது வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வருகிறது.இந்த நிலையில் கன்னியாகுமரியில் மழை பெய்து வருவதால் விவேகானந்தர் மண்டபத்திற்கு சுற்றுலா படகு சேவை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. கடல் அலைகள் ஆக்ரோஷமாக காணப்படுவதால் மலக்குடி, கோவளம் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த நாட்டுப் படகு மீனவர்களும் மீன்பிடிக்கச் செல்லவில்லை.

Post a Comment

0 Comments