மனைவி அடிக்கடி தகராறு.... திருமணம் செய்து வைத்த புரோக்கரை வெளுத்தெடுத்த வாலிபர்

 

விழுப்புரம் மாவட்டம் வளவனூர் அருகே வடவாம் பலத்தை சேர்ந்த ஜானகிராமன் என்பவருடைய மகன் சக்திவேல். இவருக்கு கடந்த 12 வருடங்களுக்கு முன்பு திருமண புரோக்கர் ஆன அரசமங்கலத்தை சேர்ந்த பெருமாள் என்பவர் தனது ஊரை சேர்ந்த ஜெகதீஸ்வரி என்ற பெண்ணை திருமணம் செய்து வைத்துள்ளார். இந்த நிலையில் சக்திவேல் மற்றும் ஜெகதீஸ்வரிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. சம்பவத்தன்று கணவன் மனைவியிடையே மீண்டும் தகராறு ஏற்பட்ட நிலையில் கோபமடைந்த ஜெகதீஸ்வரி கணவரிடம் கோபித்துக் கொண்டு தனது தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.

இந்த நிலையில் அரச மங்கலம் ரேஷன் கடை அருகே பெருமாள் நின்று கொண்டிருந்தபோது அங்கு சென்ற சக்திவேல் நீதானே எனக்கு பெண் பார்த்து திருமணம் செய்து வைத்தாய், தற்போது என் மனைவி என்னிடம் அடிக்கடி தகராறு செய்து வருகிறார் என்று கூறி பெருமாளை திட்டி கடுமையாக தாக்கியுள்ளார். இதனைத் தொடர்ந்து போலீசில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து சக்திவேலை கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.

Post a Comment

0 Comments