தனது சொந்த ஊரில் வாக்களித்த மக்களுக்கு நன்றி கூறிய தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன்
தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள நாராயணத் தேவன் பட்டி என்ற கிராமம் தேனி பாராளுமன்ற திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வனின் சொந்த ஊர் ஆகும்.நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் தனக்கு வாக்களித்த தேனி பாராளுமன்ற மக்களுக்கு தங்க தமிழ்ச்செல்வன் தொடர்ந்து தனது நன்றிகளை தெரிவித்து வருகிறார்.
இதன் தொடர்ச்சியாக இன்று கம்பம் அருகே உள்ள தனது சொந்த ஊரான நாராயணத்தேவன் பட்டியில் திறந்த வாகனத்தில் ஊர்வலமாக வந்து தனக்கு வாக்களித்த மற்றும் வாக்களிக்காத மக்களுக்கும் தனது நன்றியினை தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்தார்.இந்த நிகழ்ச்சியில் ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன், கம்பம் ஒன்றிய செயலாளர் தங்கப்பாண்டி, கிளைச் செயலாளர் சேகர் மற்றும் கழக நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இந்த நன்றி அறிவிப்பு கூட்டத்தில் பேசிய தங்க தமிழ்ச்செல்வன் நமது ஊரில் எனக்கு எதிராக 1000 வாக்குகள் செலுத்தி உள்ளனர். நான் நமது ஊரின் பெயரை இன்று செங்கோட்டையில் ஒழிக்க செய்துள்ளேன்.
அந்த ஒரு நல்ல விஷயத்துக்காவது நமது மக்கள் சாதி, மதம், கட்சி பாகுபாடுன்றி எனக்கு வாக்களித்து இருக்க வேண்டும். நான் ஆயிரம் வாக்குகளில் தோற்று இருந்தால் எனது குடும்பத்தாரும், மற்றவர்கள் நமது ஊரை பற்றி என்ன நினைத்திருப்பார்கள் என்று யோசித்துப் பாருங்கள்.
அனைத்து மக்களும் எனக்கு வாக்களித்து இருந்தால் நமது ஊரைப்பற்றி இன்று இந்தியா முழுவதும் பேசப்பட்டு இருக்கும் இனிவரும் காலங்களிலாவது அனைத்து மக்களும் நல்லவர் யாரு, கெட்டவர் யார் என்று பார்த்து வாக்களிக்க வேண்டும் என்று கூறி நன்றி செலுத்தினார்.
No comments