செங்கத்தில் மத்திய பாஜக அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் புதிய பேருந்து நிலையம் எதிரே அம்பேத்கர் சிலை அருகில் அகில இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி சார்பில் திருவண்ணாமலை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் செங்கம் G. குமார் தலைமையில் பட்ஜெட்டில் தமிழகத்திற்கு நிதி வழங்காத மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் SC,ST,துறை மாவட்டத் தலைவர் குணசேகரன், மோகன் ,செங்கம் நகரத் தலைவர் காந்தி, ஆலப்புத்தூர் ராஜி, ஒன்றிய வட்டார தலைவர் சுப்பிரமணி, நேரு ,ரத்தினம், அண்ணாமலை செங்கம் வட்டார பொதுச் செயலாளர் சஞ்சீவ் மற்றும் காங்கிரஸ் கட்சியினர், தொண்டர்களும் திரளாக கலந்து கொண்டனர்.
திருவண்ணாமலை மாவட்ட செங்கம் செய்தியாளர் S.சஞ்சீவ்.
No comments