• Breaking News

    திருப்போரூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட திருப்போரூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கலைஞரின் கனவு இல்லம் திட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது


    செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட திருப்போரூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற 2024-2025 ஆம் ஆண்டு கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு புதியாதாக வீடு கட்டுவதற்கு பணி ஆணை வழங்கும் விழா செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.அருண்ராஜ்  அவர்கள் தலைமையில் திருப்போரூர் ஒன்றிய பெருந்தலைவர் திருப்போரூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திருப்போரூர் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் திரு.எல்.இதயவர்மன் அவர்கள்  வரவேற்புரையாற்றினார் பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கு பணி ஆணை வழங்கி  விழா பேருரை ஆற்றினார் இதில்  சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட கழக செயலாளர் குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் அவர்கள் திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.எஸ்.எஸ்.பாலாஜி அவர்கள்,  செங்கல்பட்டு மாவட்ட திட்ட இயக்குனர் அவர்கள் கலந்து கொண்டு பயனிகளுக்கு வீடு கட்டுவதற்கான பணி ஆணை வழங்கினார்கள்.

    உடன் தலைமை செயற்குழு உறுப்பினர் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் ஜி.சி.அன்புசெழியன்,திருப்போரூர் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் வேளாண்மை ஆத்மா குழு தலைவர் எம்.சேகர், திருப்போரூர் பேரூராட்சி மன்றத் தலைவர் பேரூர் கழக செயலாளர் எம்.தேவராஜ், வட்டார வளர்ச்சி அலுவலகங்கள் அரசு அதிகாரிகள், மாவட்ட குழு உறுப்பினர்கள், ஒன்றிய குழு உறுப்பினர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், ஊராட்சி மன்ற துணை தலைவர்கள், வார்டு உறுப்பினர்கள், கழக நிர்வாகிகள் மற்றும் பயனாளிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர் இறுதியில் திருப்போரூர் ஊராட்சி ஒன்றிய துணை பெருந்தலைவர் திருமதி சத்தியா சேகர் அவர்கள் நன்றியுரையாற்றினார்.

    No comments