திருப்பதி கோவில்: அக்டோபர் தரிசன டிக்கெட்டுகள் வெளியிடும் தேதி அறிவிப்பு
ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினம் தோறும் லட்சக்கணக்கான பயணிகள் சுவாமி தரிசனம் செய்து வருகிறார்கள். இந்த நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அக்டோபர் மாதம் சுவாமி தரிசனம் செய்வதற்கான டிக்கெட்டுகளை ஆன்லைனில் வெளியிடும் தேதியை திருப்பதி தேவஸ்தானம் தற்போது அறிவித்துள்ளது.அதன்படி வருகின்ற ஜூலை 18ஆம் தேதி காலை 10 மணி முதல் 20ஆம் தேதி காலை 10 மணி வரை குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படும் சுப்ரபாதம், அர்ச்சனை மற்றும் தோமாலை உள்ளிட்ட சேவைகளுக்கு ஆன்லைனில் முன்பதிவு செய்து கொள்ளலாம். அன்று மதியம் 12 மணிக்கு குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படும் பக்தர்கள் பணம் செலுத்தி டிக்கெட்டுகளை பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments