• Breaking News

    வல்லூர் என்.டி.இ.சில் நிறுவனம் சார்பில் பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி மையங்களுக்கு நலத்திட்ட உதவிகள்


    திருவள்ளூர் மாவட்டம்மீஞ்சூர் ஊராட்சி ஒன்றியம்,வல்லூரில் செயல்பட்டு வரும் என்.டி.இ.சி.எல் நிறுவனத்தின் 2023-24 ஆம் ஆண்டிற்கான சி.எஸ்.ஆர் நிதியின் மூலம் 10 அரசு பள்ளிகளுக்கு நவீன வகுப்பறைகளும் (ஸ்மார்ட் கிளாஸ்) 100 அங்கன்வாடிகளுக்கு சிறப்பு தரை விரிபான்களும் கர்மவீரர் காமராஜரின் பிறந்தநாளான இன்று அந்த நிறுவனத்தின் இணை பொது மேலாளர் கார்த்திகேயன் மற்றும் சி.எஸ்.ஆர் அலுவலர் செல்வி. மாளவிகா ஆகியோரின் முன்னிலையில்,மீஞ்சூர் ஒன்றியக்குழு பெருந்தலைவர்  அத்திப்பட்டு ஜி. ரவி தலைமையில் பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை.சந்திரசேகர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நலத்திட்டங்களை தொடங்கிவைத்தார். இதில் சம்மந்தப்பட்ட பள்ளியின் தலைமை ஆசிரியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், மற்றும் மாணவர்கள் என் திரளாக கலந்துகொண்டனர்.



    No comments