தாம்பரம் - நாகர்கோவில் ரயில் நாளை முதல் ரத்து - தெற்கு ரயில்வே அறிவிப்பு
தாம்பரம் மற்றும் நாகர்கோவில் முன்பதிவில்லா அந்யோதயா விரைவு ரயில் நாளை ஜூலை 22 முதல் ஜூலை 31ஆம் தேதி வரை முழுவதுமாக ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தென் மாவட்டங்களுக்கு செல்லும் பயணிகளுக்கு தாம்பரம் மற்றும் நாகர்கோவில் முன்பதிவு இல்லா அந்தியோதயா விரைவு ரயில் வரப் பிரசாதமாக உள்ளது.
இந்த நிலையில் தாம்பரம் ரயில் நிலைய மறு சீரமைப்பு பணிகள் நடைபெறுவதால் அங்கிருந்து புறப்படும் அல்லது செல்லும் ரயில் சேவைகளை ஜூலை 22 முதல் ஜூலை 31 வரை 10 நாட்களுக்கு பல மாற்றங்கள் செய்து தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி தாம்பரம் மற்றும் நாகர்கோவில் முன்பதிவு இல்லா அந்தியோதயா விரைவு ரயில் 10 நாட்களுக்கும் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.
No comments