கோவை நிலச்சரிவு.... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் அறிவிப்பு
கோயம்புத்தூர் மாவட்டம் வால்பாறையில் உள்ள சேலையாறு அணை அருகே இன்று காலை ஏற்பட்ட நிலச்சரிவில் ஒரு வீட்டின் மீது மண் மற்றும் பாறைகள் விழுந்தது. அப்போது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த ராஜேஸ்வரி (57) மற்றும் அவருடைய பேத்தி தனிப்பிரியா (15) ஆகியோர் உயிரிழந்தனர்.
இதேபோன்று பொள்ளாச்சி திப்பம்பட்டி பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் ஹரிஹரசுதன் (21) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்நிலையில் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் உயிரிழந்த 3 பேரின் குடும்பத்தினருக்கும் தலா ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் எனவும் முதல்வர் அறிவித்துள்ளார்.
No comments