தமிழக கல்லூரி மாணவர்கள் கேரளாவுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் - உயர்கல்வித்துறை
கேரளாவில் 14 வயது சிறுவர் நிபா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சிறுவருடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். நமது அண்டை மாநிலமான கேரளாவில் நிபா வைரஸ் பரவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் இதனை தடுக்க தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில் தமிழக உயர்கல்வித்துறை சார்பாக அனைத்து கல்லூரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அரசு மற்றும் அரசு உதவி பெறும், தனியார் கல்லூரி மாணவ மாணவிகள் கேரளாவுக்கு கல்வி சுற்றுலா செல்வதை தவிர்க்க வேண்டும் என்று உயர்கல்வித்துறை சார்பாக அறிவுறுத்தப்பட்டுள்ளது. நிபா வைரஸ் தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை சார்பில் அண்மையில் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
No comments