• Breaking News

    பெரம்பலூர் அருகே ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலய தீமிதி திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு நேர்த்திக்கடன் செலுத்தினர்


     பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், பூலாம்பாடி கிராமத்தில் அமைந்துள்ள  ஸ்ரீதர்மராஜா ஸ்ரீ திரெளபதி அம்மன் ஆலய தீ மிதி திருவிழா மற்றும் ஊரணி பொங்கல் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்றுவருகிறது.

    அதனைத்தொடர்ந்து திருவிழாவின் முக்கிய நிகழ்வாக  தீ மிதித்தல் நிகழ்ச்சி இன்று நடைப்பெற்றது.இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தீமித்து தங்களது நேர்த்திக்கடன் செலுத்தினர்.நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பன்னாட்டு தொழிலதிபர் டத்தோ பிரகதீஸ்குமார், கோவில் நிர்வாகிகள், பொதுமக்கள் ஆகியோர் செய்திருந்தனர்.

    செய்தியாளர் எம்.முருகானந்தம்

    No comments