ஆடி மாத சிறப்பு பூஜை..... சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று மாலை நடைதிறப்பு
கேரள மாநிலத்தில் பிரசித்தி பெற்ற ஐயப்பன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் மகர விளக்கு பூஜை மற்றும் மண்டல பூஜை உள்ளிட்ட சில விசேஷ நாட்களில் மட்டும் தான் நடை திறக்கப்படும். அந்த வகையில் தற்போது ஆடி மாத சிறப்பு பூஜைக்காக இன்று மாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட இருக்கிறது. இன்று மாலை நடை திறக்கும் நிலையில் பூஜைகள் எதுவும் நடைபெறாது.
ஆனால் நாளை முதல் வழக்கம்போல் பூஜைகள் நடைபெறும். இதனால் பக்தர்கள் நாளை முதல் ஜூலை 20ஆம் தேதி வரை சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். அதன் பிறகு தினதோறும் அதிகாலை 5:20 மணி முதல் காலை 10 மணி வரை மட்டுமே நடை திறந்திருக்கும். ஆன்லைனில் முன்பதிவு செய்த பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஜூலை 20ஆம் தேதி கோவில் நடை அடைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments