எலி காய்ச்சலால் மீண்டும் ஒருவர் பலி
கேரளா மாநிலத்தில் சென்ற மாதம் காற்றின் மாறுபாடு காரணத்தால் அங்கு பரவலாக மழை பெய்து வந்தது. இந்நிலையில் பருவமழை தொடங்கிய காரணத்தினால் மக்கள் அதிக அளவில் நோய்களால் பாதிக்கப்படுக்கின்றனர். இதனையடுத்து கேரளாவில் டெங்கு, மலேரியா, பன்றி காய்ச்சல், எலி காய்ச்சல் போன்ற நோய்கள் அதிக அளவில் பரவி வருகின்றன.
இந்நிலையில் கேரளா குருவாயூர் பகுதிக்கு அருகே மம்மியூரில் சுரேஷ் ஜார்ஜ் (62) என்பவர் வசித்து வந்தார். இவர் கோட்டப்பாடி ஜிம் ஒன்றில் கோச்சாக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு எலி காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து ஜார்ஜை எர்ணாகுளத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் ஏற்கனவே வாலிபர் ஒருவர் எலி காச்சலால் உயிரிழந்த நிலையில் தற்போது மீண்டும் ஒருவர் பலியானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
No comments