தேனி: தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை உருவ பொம்மையை எரிக்க பாஜகவினர் முயற்சி - தடுத்து நிறுத்திய காவல்துறையினர்
பாரதிய ஜனதா கட்சி தலைவர் அண்ணாமலையை கண்டித்து பேசிய காங்கிரஸ் தமிழக தலைவர் செல்வப் பெருந்தகையை கண்டித்து தமிழக முழுவதும் பாரதிய ஜனதா கட்சியினர் தங்களின் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக இன்று தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள ராயப்பன்பட்டியில் உத்தமபாளையம் கிழக்கு ஒன்றிய செயலாளர் திரவியம் தலைமையில் தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வப் பெருந்தகையின் உருக பொம்மையை எரிக்க முயற்சி செய்தபோது சம்பவ இடத்திலிருந்த காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால் அந்தப் பகுதியில் பெறும் பரபரப்பு ஏற்பட்டது.
உருவ பொம்மை எரிக்க முயற்சி செய்தவர்களை காவல்துறையினர் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர்.இந்த நிகழ்ச்சியில் உத்தமபாளையம் கிழக்கு ஒன்றிய நிர்வாகிகள், கிளை கழக நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
No comments