• Breaking News

    தாம்பரம் மாநகராட்சி முன்னாள் ஆணையர் போலி கையெழுத்து..... சிபிஐ விசாரணை வேண்டுமென பாஜக மாவட்ட தலைவர் கோரிக்கை.....

     

    தாம்பரம் மாநகராட்சி, பம்மலில் ஆமை வேகத்தில் பாதாள சாக்கடை பணிகள் நடைபெற்று வருவதால் அவற்றை விரைவில் முடித்து பொதுமக்களின் சிரமத்தை போக்கவும், மழைக்காலத்திற்கு முன்பு கால்வாய்களை தூர் வரவும், குப்பைகளை அகற்றாமல் இருப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது அவற்றை தடுக்க நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தி தாம்பரம் மாநகராட்சியை கண்டித்து பம்மல், இரட்டை பிள்ளையார் கோவில் தெரு அருகே செங்கல்பட்டு வடக்கு மாவட்ட பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இதில் மாவட்ட தலைவர் செம்பாக்கம் வேத சுப்பிரமணியம், பம்மல், பொழிச்சலூர் மண்டல தலைவர் செந்தில்குமார் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட தலைவர் செம்பாக்கம் வேத சுப்பிரமணியம் கூறுகையில் :

    தாம்பரம் மாநகராட்சி, பம்மல், அனகாபுத்தூர், பொழிச்சலூர் பகுதிகளில் இரண்டு மாதங்களாக பாதாள சாக்கடை திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.

    அதை சரியாக திட்டம் இடாமல் செய்து வருவதால் தினமும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் பயன்படுத்தி வரும் சாலையை ஆங்காங்கே குழிகள் தோண்டி மரண குழிகளாக காட்சியளிக்கிறது.

    இந்த பணிகளால் ஏற்படும் மண்புழுதிகளால் இப்பகுதியில் உள்ள வியாபாரிகள் பாதிக்கப்படுகின்றனர், சுகாதார சீர்கெடும் ஏற்படுகிறது.

    இந்திய வரலாற்றிலேயே மாநகராட்சி ஆணையர் காவல் நிலையத்தில் சென்று தனது கையெழுத்தை ஏகே பில்டர்ஸ் என்ற நிறுவனம் போலியாக போட்டு என்ஓசி தயாரித்து உள்ளார்கள் என புகார் அளித்துள்ளார் இது போன்ற போலி கையெழுத்து சம்பவங்கள் எல்லாம் நடைபெறுகிறது.

    இந்தப் போலி கையெழுத்து விவகாரத்தில் சிபிஐ விசாரணை தேவை உள்ளது.

    முன்னாள் மாநகராட்சி ஆணையர் இருந்தபோது எவ்வளவு பணிகளுக்கு போலி கையெழுத்து இடப்பட்டுள்ளது என்பதை சிபிஐ விசாரணை மூலம் வெளிக்கொண்டு வரவேண்டும்.

    அதற்கான நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் பாஜக சார்பில் அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவித்தார்.

    No comments