ஆரணி பேரூராட்சியில் பாஜகவின் தெருமுனை கூட்டம்..... அமைப்புசாரா மற்றும் மக்கள் சேவை பிரிவு மாவட்டச் செயலாளர் அனு சிலம்பரசன் ஏற்பாட்டில் நடைபெற்றது
திருவள்ளூர் மாவட்டம் ஆரணி பேரூராட்சியில் பாரதிய ஜனதா கட்சி அமைப்புசாரா மற்றும் மக்கள் சேவை பிரிவு சார்பில் மாநில செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மான விளக்க தெருமுனை கூட்டம் நடைபெற்றது. இந்த தெருமுனை கூட்டத்தில் சோழவரம் வடக்கு ஒன்றிய தலைவர் எம். ஜெயகுமார் முன்னிலை வகித்தார்.அமைப்புசாரா மற்றும் மக்கள் சேவை பிரிவு மாவட்ட தலைவர் மேலூர் பா. வருண் காந்தி தலைமை தாங்கினார்.
இந்நிகழ்ச்சியில் சிறப்புரை அமைப்புசாரா மற்றும் மக்கள் சேவை பிரிவு மாநிலத் தலைவர் ராதாகிருஷ்ணன் மற்றும் மாவட்ட திருவள்ளூர் கிழக்கு மாவட்ட தலைவர் பி.செந்தில்குமார் ஆகியோர் கலந்து கொண்டு தெருமுனை கூட்டத்தை சிறப்பாக நடத்தி கொடுத்தனர் இதில் மக்களின் பிரச்சனைகள் மற்றும் திமுக அரசை கண்டித்தும் பாரதிய ஜனதா கட்சியின் சாதனைகள் பற்றி கூறியும் மாநில செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விளக்கி பொதுமக்களுக்கு கூறினார்கள்.நிகழ்ச்சியின் நன்றியுரை அமைப்புசாரா மற்றும் மக்கள் சேவை பிரிவு மாவட்டச் செயலாளர் அனு சிலம்பரசன் கூறினார்.
No comments