கல் மனம் கொண்ட காதலியால் தற்கொலை செய்துகொண்ட காதலன்

 


நீலகிரி மாவட்டம் ஊட்டியில்  தலைக்குந்தா என்னும் பகுதியில் ஞானசேகரன் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகன் கார்த்திக்(24) அப்பகுதியில் உள்ள இளம் பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இவர்கள் இருவரும் கடந்த 1 வருடமாக காதலித்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. சில மாதங்களுக்கு முன் அந்த இளம் பெண் கருத்து வேறுபாடு காரணமாக கார்த்திகை பிரிந்துள்ளார். மேலும் கார்த்திக்கை திருமணம் செய்துகொள்ள முடியாது என்றும் கூறியுள்ளார்.இந்நிலையில் அந்த பெண்ணின் பிரிவை தாங்கிக்கொள்ள முடியாத கார்த்திக் மிகவும் மன வேதனையில் இருந்துவந்துள்ளார். 

அதோடு அந்த இளம்பெண் கார்த்திக்கிடம் பேசுவதையும் நிறுத்தி உள்ளார். இதனால் மிகுந்த மனஉளைச்சலில் தனிமையில் இருந்த கார்த்திக், நாளடைவில் மதுப்பழக்கத்திற்கு அடிமையானார்.இதனால் அவர் வேலைக்கு சரிவர செல்லாமல் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் காதலியின் பிரிவை ஏற்றுக் கொள்ள முடியாத கார்த்திக் அவ்வப்போது தற்கொலை செய்வதற்கும் முயன்று காப்பாற்றப்பட்டுள்ளார். இந்நிலையில் தான் கார்த்திக் கடந்த 24 ம் தேதி இரவு தூக்குப்போட்டு தற்கொலை செய்துக்கொண்டார்.இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் கார்த்திக்கின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் காவல்துறையினர் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். காதலியின் பிரிவால் இளைஞயர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Post a Comment

0 Comments