விமானத்தில் பறக்க ஆசை..... விமான வடிவில் வீட்டை கட்டிய கட்டிட தொழிலாளி
பொதுவாகவே மனிதர்களில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ஆசை இருக்கும். அந்த ஆசையே நிறைவேற்றிக் கொள்ள பலரும் தங்களுடைய வாழ்க்கையில் எந்த ஒரு எல்லைக்கு வேண்டுமானாலும் செல்வார்கள். ஆனால் ஒரு சிலருக்கு மட்டுமே ஆசைகள் நிறைவேறும். அதன்படி கம்போடியாவை சேர்ந்த க்ராச் போவ் என்ற கட்டிட தொழிலாளி ஒருவர் விமானத்தில் செல்ல வேண்டும் என்று நீண்ட நாட்களாக ஆசைப்பட்டு உள்ளார்.
ஆனால் அந்த ஆசை நிறைவேறாது என தெரிந்து கொண்ட அவர் தன்னுடைய ஆசையை வீடாக மாற்றி உள்ளார். அதாவது தரை மட்டத்திலிருந்து சுமார் ஆறு அடி உயரத்திற்கு ஏற்றி அந்தரத்தில் வீடு ஒன்றை கட்டியுள்ளார்.இந்த வீட்டில் இரண்டு படுக்கை அறைகள் மற்றும் குளியல் அறைகள் உள்ளன. கடந்த சுமார் 30 ஆண்டுகளாக சேர்த்து வைத்த பணத்தை வைத்து இந்த கனவு வீட்டை அவர் கட்டி முடித்துள்ளார்.
இந்த வீட்டை வெளியில் இருந்து பார்ப்பதற்கு போலி என்ஜின்கள் மற்றும் இறக்கைகள், டெயில் பிளேனுடன் இருக்கிறது. அசல் விமானம் போல இருக்கும் இந்த வீட்டில் இருக்கும் போது வானில் பறப்பது போல உணர்வதாக அவர் கூறியுள்ள நிலையில் தற்போது இது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
No comments