கள்ளக்காதலியின் பேச்சைக்கேட்டு மனைவியை அடித்து துவைத்த கணவன் கைது

 

சேலம் மாவட்டத்தில் சங்கரகிரி பகுதியில் கணேஷ், ஜூலியட்மேரி எனும் தம்பதியினர் வசித்து வருகின்றார்கள். இதில் கணேசன் தொழிலாளியாகவும், ஜூலியட்மேரி மருத்துவமனையில் செவிலியராகவும் வேலை பார்த்து வருகிறார்கள். இந்நிலையில் கணேசனுக்கு வேறொரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதையறிந்த ஜூலியட்மேரி அந்தப் பெண்ணின் செல்போனுக்கு தொடர்பு கொண்டு கண்டித்துள்ளார்.

உடனடியாக இதனை அந்தப் பெண் கணேசனிடம் கூறியுள்ளார். இதனால் கோபமடைந்த கணேசன், தன மனைவியை தகாத வார்த்தைகளால் திட்டியதோடு அடித்து துன்புறுத்தியுள்ளார். மேலும் துப்பட்டாவால் ஜூலியட்மேரியின் கைகளை கட்டி அந்தப் பெண்ணிடம் மன்னிப்பு கேட்குமாறு கூறி  கணேசன் அடித்துள்ளார். இதுகுறித்து ஜூலியட்மேரி காவல்துறையினரிடம் புகார் அளித்தார். அந்தப் புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கணேசனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Post a Comment

0 Comments