• Breaking News

    ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: வழக்கறிஞர் அருளை பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்று போலீசார் விசாரணை

     

    ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக வழக்கறிஞர் அருளை பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பெரம்பூரில் பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5ம் தேதி வெட்டிக்கொல்லப்பட்டார். இந்த கொலை வழக்கில் ஏற்கனவே 16 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், ஹரிகரன், பொன்னை பாலு, ராமு, அருள் ஆகிய 4 பேரை போலீஸ் காவலில் எடுத்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

     தமாகவில் இருந்து நீக்கப்பட்ட வழக்கறிஞர் ஹரிகரனிடம் 5 நாட்களும் மற்ற 3 பேரிடம் 3 நாட்களும் விசாரணை செய்ய நீதிமன்றம் அனுமதி வழங்கி உளளது.ஆம்ஸ்ட்ராங் கொலையில் கொலையாளிகளுக்கு எவ்வளவு பணம் பட்டுவாடா செய்துள்ளார்கள். யார் யார் பணம் கொடுத்தார்கள் உள்ளிட்ட விவரங்களையும் போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும் சம்பவ செந்திலுக்கு பக்கபலமாக இருக்கும் அரசியல் பெரும்புள்ளிகள், தொழிலதிபர்கள், ஓய்வுபெற்ற காவல் துறையினர் குறித்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

    இதேபோல் காவலில் எடுத்துள்ள பொன்னை பாலு, ராமு, வழக்கறிஞர் அருள் ஆகியோரிடமும் தனிப்படை போலீசார் தனித்தனியாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.வழக்கறிஞர் அருளை பெரம்பூர், புழல் உள்ளிட்ட இடங்களுக்கு தனியாக அழைத்துச் சென்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கொலைக்கான சதி திட்டம் தீட்டிய இடங்களுக்கும் அருளை அழைத்துச் சென்று போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட அருளை போலீஸ் 2-வது முறையாக காவலில் எடுத்து விசாரித்து வருகிறது.

    No comments