• Breaking News

    பறிமுதல் செய்த குட்காவை பதுக்கிய காவலர்கள் சஸ்பெண்ட்

     

    ஈரோடு மாவட்டத்திலுள்ள பவானி பகுதியில் அவ்வப்போது போக்குவரத்து காவலர்கள் சோதனையில் ஈடுபடுவார்கள். அந்த வகையில் கடந்த 12ஆம் தேதி இரவு போக்குவரத்து காவலர்கள் பிரபு, சிவகுமார் ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வாகனத்தை ஆய்வு செய்தபோது அதில் குட்கா பொருள்கள் இருந்தது தெரியவந்தது. அதனை பறிமுதல் செய்த காவலர்கள், நாமக்கல் மாவட்டம் வெப்படைக்கு ரகசியமாக கொண்டு சென்று பதுக்கினர்.

    அவற்றை விடுவிக்க காவலர்கள் பேரம் பேசியதாக புகார் வந்தது. இதையறிந்த காவல் கண்காணிப்பாளர்கள், குட்கா பொருட்களை பறிமுதல் செய்த காவலர்கள் இருவரையும் ஆயுதப் படைக்கு மாற்ற உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து பவானி டிஎஸ்பி தலைமையில் நடைபெற்ற விசாரணையில், ஆயுதப்படைக்கு மாற்றப்பட்ட காவலர்கள் இருவரையும் சஸ்பெண்ட் செய்ய உத்தரவிட்டார். மேலும் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட சரக்கு வாகன ஓட்டுநர், அதன் உரிமையாளரை குறித்து விசாரணை நடைப்பெற்று வருகின்றனர்.

    No comments