கும்பகோணம்: தமிழ்நாட்டை வஞ்சித்த ஒன்றிய பாஜக அரசை கண்டித்து திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது


தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின்படி, ஒன்றிய நிதிநிலை அறிக்கையில், தமிழ்நாட்டை வஞ்சித்த பாசிச பா.ஜ.க. அரசைக் கண்டித்து, தஞ்சை வடக்கு மாவட்ட தி.மு.கழகம் சார்பில், கும்பகோணம் காந்தி பூங்கா அருகில், மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில், முன்னாள் மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் செ.இராமலிங்கம் அவர்கள், கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை க.அன்பழகன் அவர்கள்,  தமிழ்நாடு அரசு தலைமை கொறடா முனைவர் கோவி.செழியன் அவர்கள், கும்பகோணம் மாநகர கழக செயலாளரும், மாநகராட்சி துணை மேயருமான சு.ப.தமிழழகன் அவர்கள், ஒன்றிய கழக செயலாளர்கள் எஸ்.கே.முத்துசெல்வம் அவர்கள், ஜெ.சுதாகர் அவர்கள், கோ.தாமரைச்செல்வன் அவர்கள், தியாக.சுரேஷ்குமார் அவர்கள், கோ.க.அண்ணாதுரை அவர்கள், பி.எஸ்.குமார் அவர்கள், என்.நாசர் அவர்கள், மிசா என்.மனோகரன் அவர்கள், ர.உதயசந்திரன் அவர்கள், தலைமை செயற்குழு உறுப்பினர் குட்டி இரா.தெட்சிணாமூர்த்தி அவர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள் இரா.அசோக்குமார் அவர்கள், எல்.இராஜேந்திரன் அவர்கள், மாவட்ட கழக அவைத் தலைவர் க.நஜிர்முகம்மது அவர்கள், பொருளாளர் ஜெ.நடராஜன் அவர்கள், துணைச் செயலாளர்கள் கோவி.அய்யாராசு அவர்கள், எஸ்.துரைமுருகன் அவர்கள், என்.ஜெயலட்சுமி அவர்கள், தஞ்சை மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர்களின் கூட்டமைப்பு குழு தலைவர் ஆர்.கே.பாஸ்கர் அவர்கள் மற்றும் பேரூர் கழக செயலாளர்கள், ஒன்றிய – பேரூர் – மாநகர – பகுதி கழக நிர்வாகிகள், மாவட்ட – ஒன்றிய – மாநகர பிரதிநிதிகள், வட்ட – வார்டு – கிளை கழக செயலாளர்கள், நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், சார்பு அணி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு, தமிழ்நாடு அரசை வஞ்சிக்கும் ஒன்றிய பாசிச பா.ஜ.க. அரசுக்கு எதிராக தங்கள் கண்டனத்தை பதிவு செய்தனர்.

Post a Comment

0 Comments