சிவகங்கை மாவட்டத்தில் காடுகளின் பரப்பு நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. வயல் வெளிகளும் பிளாட்டுகளாக மாறி வருவதால், வன விலங்குகள் இரைதேடி தங்கள் இருப்பிடங்களை விட்டு வெளியே வருவது தொடர்கதையாகி உள்ளது. அந்த வகையில் காடுகளில் திரிந்த குரங்குகள் பல ஆண்டுகளுக்கு முன்பே நகருக்குள் இடம் பெயர்ந்து வீடுகளிலும், மரங்களிலும் வாழ்ந்து வருகிறது. நகர் பகுதிகளில் குரங்குகள் தொல்லையால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். சிவகங்கை மாவட்டம் பள்ளத்தூர் பேரூராட்சி பகுதியில் சுற்றி திரியும் குரங்குகளால் வீடுகளில் பொதுமக்கள் வாழவே அச்சப்படுகின்றனர். பள்ளி, கல்லூரி மாணவர்கள் ரோட்டில் நடமாடவே முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே, பள்ளத்தூர் பேரூராட்சியில் திரியும் குரங்குகளை பிடித்து வனத்துறையில் விடக்கோரி பள்ளத்தூர் கே.எஸ்.ரவி, ஆனந்தன் ஆகியோர் பேரூராட்சி செயல் அலுவலர் பாலசுப்பிரமணியனிடம் மனு அளித்தனர். அதை ஏற்ற பேரூராட்சி செயலர் குரங்குகளை கூண்டு வைத்து பிடித்து வனப்பகுதியில் விடுவதற்கு வனத்துறையினரிடம் மனு அளித்தார்.
0 Comments