நாகை: மாவட்ட பல பயிற்றுநர் சமூக ஆர்வலருக்கு சர்வதேச தமிழ் பல்கலைக்கழகத்தால் மதிப்புறு முனைவர் பட்டம் வழங்கப்பட்டது
நாகப்பட்டினம் மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மாவட்ட வள பயிற்றுநர் சமூக ஆர்வலர், சேவா ரத்னா ,நா.ஸ்ரீரங்கபாணிக்கு சர்வதேச தமிழ்ப் பல்கலைக் கழகத்தால் மதிப்புறு முனைவர் பட்டம் வழங்கப்பட்டது.
நாகப்பட்டினம் மாவட்டம், குழந்தைகள் மற்றும் பெண்கள் பாதுகாப்பு, குழந்தைத் திருமணத் தடுப்பு, தொழிலாளர் நலன், அரசின் காப்பீட்டுத் திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு மற்றும் ஆலோசனைகள் வழங்கியது.ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை மூலமாக கொரானாநோய்யினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவ உதவி செய்தது, கொரோனா காலத்தில் 5000 மேற்பட்ட மக்களுக்கு உணவு பொருட்கள் வழங்கியது.
தொழிலாளர்களுக்கு மன நலம் பாதுகாப்பு குறித்த ஆலோசனைகள் வழங்கியதற்கு நாகப்பட்டினம் மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மாவட்ட வள பயிற்றுநர் சமூக ஆர்வலர், சேவா ரத்னா நா. ஸ்ரீரங்கபாணி க்கு சர்வதேச தமிழ்ப் பல்கலைக் கழகத்தால் சமூக சேவைக்காக மதிப்புறு முனைவர் பட்டம் கொடைக்கானல் கோல்டன் பார்க்கில் வழங்கப்பட்டது. .இவரை சமூக ஆர்வலர்களும், மற்றும் பொது மக்களும் வாழ்த்துக்களை தெரிவித்து பாராட்டி வருகின்றனர்.
நாகை மாவட்ட நிருபர் க. சக்கரவர்த்தி
விளம்பர தொடர்புக்கு 9 7 8 8 8 3 4 1834
No comments