கும்மிடிப்பூண்டி வன்னியகுல சத்திரியர் அறக்கட்டளை சார்பில் மாணவ,மாணவியர்களுக்கான பரிசளிப்பு விழா நடைபெற்றது
கும்மிடிப்பூண்டி வன்னியர் குல சத்திரியர் அறக்கட்டளை மாணவ மாணவியர்களுக்கு 3. ஆம் ஆண்டு பரிசளிப்பு விழா கும்மிடிப்பூண்டி தனியார் மண்டபத்தில் நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் வன்னியர் குலசத்திரிய அறக்கட்டளை கௌரவ தலைவர். பொன் எட்டியப்பன் முன்னிலை வகித்தார்.வன்னியர் குலசத்திரிய அறக்கட்டளை தலைவர் எ ,ரவி தலைமையில் செயலாளர் விஜியன் வரவேற்றார்.
மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி சிறப்புரை ஆற்றினார்கள் முன்னாள் துணைவேந்தர் அண்ணா பல்கலைக்கழகம் டி. விஸ்வநாதன். அவர் பேசியது மாணவ மாணவிகள் படிப்பு அவசியத்தை எடுத்துரைத்து செல் போதைப் பழக்கத்திற்கு இடம் தராமல் படித்து முன்னேற வேண்டும் என்று அறிவுரை கூறினார்சென்னை மருத்துவக் கல்லூரி முன்னாள் முதல்வர் மோகனசுந்தரம் ஜனா குரூப் கம்பெனி தொழிலதிபர் என் சுப்பிரமணி வருகை தந்த அனைவரையும் நன்றி தெரிவித்தார் பொருளாளர் ஜெயபாலன்.
No comments