AIYF தேனி மாவட்டம் சின்னமனூர் ஒன்றிய மாநாடு சிறப்பாக நடைபெற்றது
அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் சின்னமனூர் ஒன்றிய மாநாடு வே.ஜெய்ஹிந்த் தலைமையில் கத்தோலிக்க திருச்சபை மண்டபத்தில் நடைபெற்றது. அஞ்சலி தீர்மானத்தை தோழர் தி.மணிவேல் அவர்கள் வாசித்தார். அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் மாவட்டக்குழு உறுப்பினர் தோழர் R.மகேந்திரன் வரவேற்புரை நிகழ்த்தினார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் ஒன்றிய செயலாளர் தோழர் நா.பவுன்ராஜா, தமிழ்நாடு விவசாய சங்கத்தின் மாவட்டக்குழு உறுப்பினர் தோழர் மணவாளன் ஆகியோர் மாநாட்டை வாழ்த்தி பேசினார்கள்.
மாநாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய ஒன்றிய நிர்வாகிகளை அறிமுகப்படுத்தி AIYF மாவட்ட செயலாளர் இரா.தமிழ் பெருமாள் அவர்கள் சிறப்புரையாற்றினார். 11 பேர் கொண்ட ஒன்றியக்குழு தேர்ந்தெடுக்கப்பட்டு, ஒன்றிய தலைவராக தோழர் M.விக்கி அவர்களும், ஒன்றியச் செயலாளராக வே.ஜெய்ஹிந்த் அவர்களும், ஒன்றிய துணைச் செயலாளராக செ.கார்த்திக் ராஜா அவர்களும், ஒன்றிய துணைத் தலைவராக பிரேம்குமார் அவர்களும் ஒன்றிய பொருளாளராக M.நித்தியானநாதம் அவர்களும், S.சதீஸ்குமார், மு.வேல்முருகன், NS.விக்கி ஆகியோர் நிர்வாகக்குழு உறுப்பினர்களாகவும் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். சிறப்பாக பேரவையில் இளைஞர்கள் திரளாக கலந்து கொண்டனர். மக்கள் நலன் சார்ந்த முக்கியமான தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
தீர்மானங்கள்.
✓ நிர்வாக வசதிக்காக சின்னமனூரை தலைமையிடமாகக் கொண்டு தனித்தாலுகா ஏற்படுத்த தமிழ்நாடு அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
✓ கம்பம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சின்னமனூர் ஒன்றிய பகுதி மற்றும் கம்பம் பள்ளத்தாக்குப் பகுதி மக்கள் பயன்பெறும் வகையில் இரு பாலரும் பயன்பெறும் வகையில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஏற்படுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
✓ சின்னமனூர் நாகராட்சி எல்லைக்குட்பட்ட திண்டுக்கல் குமுளி தேசிய நெடுஞ்சாலையில் எள்ளுக்கட்டைச் சாலையில் அமைந்திருந்த கடை எண் 8547 என்ற அரசு டாஸ்மாக் கடையை பக்தர்கள், வியாபாரிகள், விவசாயிகள் நலன் கருதி அரசு அகற்றிய நிலையில், மீண்டும் அதே இடத்தில் FL2 - முல்லைத் தென்றல் மனமகிழ் மன்றம் என்கிற தனியார் மதுபான கடைக்கு பொதுமக்களின் எதிர்ப்பையும் மீறி மாவட்ட நிர்வாகம் கொடுத்த அனுமதி திரும்ப பெற வேண்டும்.
✓ சின்னமனூர் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் புதிய காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் அலுவலகம் - DSP அலுவலகம் ஏற்படுத்திட தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்
✓ இளம் பெண்கள், பெண்கள் மற்றும் குடும்ப பெண்களுக்கு எதிராக நடைபெறும் வன்கொடுமைகளைத் தடுப்பதற்கு புதிய அனைத்து மகளிர் காவல் நிலையம் அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
✓ நகர் பெருக்கம், ஊர் பெருக்கம் காரணமாக ஏற்பட்டுள்ள போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்கு புதிய போக்குவரத்து காவல் நிலையம் ஏற்படுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
✓ சின்னமனூர் நகர் காவல் நிலையம் மிகப்பெரிய சுற்று வட்டாரத்தையும், பல்வேறு கிராமங்களையும் உள்ளடக்கி உள்ளதால் காவல்துறையால் மிகவும் சிரமத்திற்கும், மன உளைச்சலுக்கும் உள்ளாக வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனை தவிர்ப்பதற்கு சின்னமனூர் நகருக்கு நகர் காவல் நிலையமும், ஊரகப் பகுதிகளுக்கு ஊரக காவல் நிலையமும் ஏற்படுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
✓ நகர, ஊரக உள்ளாட்சி அமைப்புகள் மக்களின் அடிப்படை பிரச்சனைகளான சாக்கடை, குடிநீர், தெருவிளக்கு, சாலை வசதி போன்றவற்றை போர்க்கால அடிப்படையில் செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேற்கண்ட முக்கிய தீர்மானங்கள் மாநாட்டில் ஏக மனதாக நிறைவேற்றப்பட்டது.
No comments