• Breaking News

    AIYF சார்பில் தேனி மாவட்டம் ஆண்டிபட்டி ஒன்றிய பேரவை கூட்டம் சிறப்பாக நடைபெற்றது


     AIYF சார்பில் தேனி மாவட்டம் ஆண்டிபட்டி ஒன்றிய பேரவை கூட்டம் சிறப்பாக நடைபெற்றது.அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் ஆண்டிபட்டி ஒன்றிய பேரவை தோழர் தா.பாண்டியன் அவர்கள் நினைவு இல்லத்தில் மு.பிரபாகரன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

    இம்மாநாட்டில் மாநாட்டு கொடியை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய துணைச் செயலாளர் தோழர் P.முருகன் ஏற்றினார். பா.அண்ணாமலை அஞ்சலி தீர்மானம் வாசித்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நகரச் செயலாளர் தோழர் K.முனீஸ்வரன் மாநாட்டை துவக்கி வைத்து உரையாற்றினார். மாவட்ட துணைச் செயலாளர் வே.பரமேஸ்வரன், ஒன்றிய செயலாளர் பா.பிச்சைமணி,  தமிழ்நாடு விவசாய சங்கத்தின் மாவட்டக்குழு உறுப்பினர் தோழர் மணவாளன் ஆகியோர் பேரவையை வாழ்த்தி பேசினார்கள். மேலும் ஆண்டிபட்டி பேரூராட்சியின் 10வது வார்டு பேரூராட்சி மன்ற உறுப்பினர் தோழர் மு.மீனாட்சி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் EP.காசி விஸ்வநாதன், மூத்த தோழர் T.பெருசு உள்ளிட்ட இளைஞர்களும், இளம் பெண்களும் இந்த பேரவையில் கலந்து கொண்டனர்.

    தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய ஒன்றிய நிர்வாகிகளை அறிமுகப்படுத்தி AIYF மாவட்ட செயலாளர் இரா.தமிழ் பெருமாள் அவர்கள் சிறப்புரையாற்றினார். ஏழு பேர் கொண்ட ஒன்றியக்குழு தேர்ந்தெடுக்கப்பட்டது. அக்குழுவிற்கு ஒன்றிய தலைவராக தோழர் பா.அண்ணாமலை அவர்களும், ஒன்றியச் செயலாளராக மு.பிரபாகரன் அவர்களும், ஒன்றிய துணைச் செயலாளர்களாக சு.வேல்முருகன், சு.கோட்டை கருப்பசாமி ஆகியோர்களும், ஒன்றிய துணைத் தலைவர்களாக சிவக்குமார், ஆண்டிக்காளை ஆகியோர்களும் ஒன்றிய பொருளாளராக R.போதுராஜா ஆகியோர் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். சிறப்பாக பேரவையில் இளைஞர்களும் பெண்களும் திரளாக கலந்து கொண்டனர். மக்கள் நலன் சார்ந்த முக்கியமான தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.


    தீர்மானங்கள்.


    ✓ முல்லை பெரியாற்றில் இருந்து குழாய் மூலம் தண்ணீர் கொண்டு வந்து ஆண்டிபட்டி ஒன்றிய பகுதிகளில் உள்ள குளம், கண்மாய், குட்டைகளில் தண்ணீரை நிரப்பி விவசாயத்தை பாதுகாக்க வேண்டும்.


    ✓  ஆண்டிபட்டி நகரில் சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுத்திடவும், போக்குவரத்து நெரிசலை தவிர்த்திடவும் திட்டமிடப்பட்ட புறவழிசாலைப் பணிகளை உடனடியாக துவங்கிட வேண்டும்.


    ✓ ஆண்டிபட்டி வட்டாரப் பகுதிகளில் அரசு மதுபானக் கடைகளில் தீர்மானிக்கப்பட்ட விற்பனை நேரத்தை தவிர, கள்ளத்தனமாக கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்வதை தடுத்து காவல்துறை இரும்புக் கரம் கொண்டு தடுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.


    ✓ ஆண்டிபட்டி நகர் MGR சிலை அருகில் உள்ள தனியார் FL2 RR காஸ்மோ பாரில் தங்குதடையின்றி 24 மணி நேரமும் சட்டங்களை மதிக்காமல் தொடர்ந்து மது விற்பனை செய்து வரும்  உரிமையாளரை காவல்துறை குண்டர் சட்டத்தில் வழக்கு பதிவு செய்து சீரழியும் இளைஞர்களையும், மாணவர்களையும் பாதுகாக்க வேண்டும்.


    ✓ ஆண்டிபட்டி சுற்றுவட்டாரப் பகுதியில் தடைசெய்யப்பட்ட கஞ்சா, குட்கா, போதை ஊசி, போதை மாத்திரை உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனை செய்பவர்கள் மீது உடனடியாக காவல்துறை வழக்கு பதிவு செய்து கடுமையான தண்டனை கிடைக்க நடவடிக்கை எடுத்து, இளைஞர்களை முழுமையாக போதைப் பழக்கத்தில் இருந்து மீட்டெடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். உள்ளிட்ட இளைஞர்கள் மாணவர்கள் மக்களுடன் சார்ந்த முக்கிய தீர்மானங்கள் ஏக மனதாக நிறைவேற்றப்பட்டது.

    No comments