பெரம்பலூரில் பாரதிய மஸ்தூர் சங்கம் 70 வது துவக்க நாள் விழாவை முன்னிட்டு கொடியேற்று விழா நடைபெற்றது
பெரம்பலூர் மாவட்டத்தில் பாரதிய மஸ்தூர் சங்க 70வது ஸ்தாபன ( துவக்க நாள்) விழாவை முன்னிட்டு சுமார் ஏழு இடங்களில் கொடியேற்று விழா நிகழ்ச்சி மாவட்டத் தலைவர் சிவராஜ் தலைமையில் நடைபெற்றது. முதலில் மாவட்ட அலுவலகத்தில் முதல் கொடியேற்றி தொடங்கின பின்னர் பெரம்பலூர் 4 ரோடு, முருக்கன்குடி, வதிஷ்ட்டபுரம். நொச்சிக்குளம், எறையூர், மேலமாத்தூர், உள்ளிட்ட இடங்களில் கொடியேற்றி நிகழ்ச்சி நடைபெற்றது.முன்னதாக அனைவரையும் மாவட்ட செயல் தலைவர் சிவம் செந்தில்குமார் வரவேற்றார்.இதில் சிறப்பு அழைப்பாளராக மாநிலத் துணைத் தலைவர் எஸ். மணிவேல் கலந்து கொண்டு கொடியினை ஏற்றினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் ஏ.கே . செந்தில்குமார்,மாவட்ட பொருளாளர் அமுதா கர்ணன்.மாவட்ட இணை செயலாளர் கிருஷ்ணமூர்த்தி.மாவட்ட துணை தலைவர்கள். தமிழரசன்,குழந்தைவேல். மாவட்ட துணை செயலாளர்கள் கோவிந்தராஜ்.தர்மலிங்கம். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஆறுமுகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் எம்.முருகானந்தம்
No comments