கரூர் தெற்கு காந்தி கிராமத்தை சேர்ந்த செந்தில்குமார் -சுந்தரவள்ளி தம்பதியினர் இவர்களது மகன் ஜீவா (20). இவர் திருப்பூரில் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வந்தார் . இவர் சில தினங்களுக்கு முன்பு விடுமுறையில் வீட்டிற்கு வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 22 ஆம் தேதி வெளியில் சென்ற ஜீவா அதன்பின் வீடு திரும்பவில்லை. அவரது பெற்றோர் பல இடங்களில் தேடியும் கிடைக்காத நிலையில் அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தேடிவந்தனர்.
மேலும் ஜீவாவின் செல்போன் அழைப்பை ஆய்வு செய்ததில் அவரது நண்பர் சசிகுமாரை பிடித்து விசாரணை நடத்தியதில் பலத்திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தது. இதில் கூட்டாளிகளுடன் சேர்ந்து ஜீவாவை கொன்று புதைத்ததை சசிக்குமார் ஒப்புக்கொண்டுள்ளார். சிட்கோ தொழிற்பேட்டை அருகில் பாலடைந்த கட்டிடத்தின் பின்புறம் முட்புதர் நடுவில் ஜீவாவின் உடலை புதைத்ததாக கூறினார். அதன் பின் கரூர் வட்டாட்சியர் தலைமையில் சடலத்தை தோண்டி எடுத்தபோது ஜீவாவின் உடல் பாகங்கள் தனித்தனியாக வந்தன.இதில் கை, கால்கள், தலை, உடம்பு பகுதி என 6 துண்டாக வெட்டி புதைக்கப்பட்டு இருந்தது. அதன்பின் அங்கேயே பிரேத பரிசோதனை நடத்தப்பட்டது. இதுகுறித்து காவல்துறையினர் இரண்டாம் கட்ட விசாரணை நடத்தியதில் ஜீவா மற்றும் சசிகுமார் இடையேயான பகை சமூக வலைத்தளத்திலும் வளர்ந்ததும். சமீபத்தில் ஜீவா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சசிகுமாரின் “தலையை சிதைத்து விடுவேன்” என பதிவிட்டு இருந்ததும் தெரியவந்தது.
அந்த ஆத்திரத்தில் தான் அவரது கதையை முடித்தோம் என காவல்துறையினரிடம் சசிகுமார் கூறியிருக்கிறார். மேலும் காவல்துறையினர் சசிகுமார் மற்றும் அவரது கூட்டாளி என 9 பேரிடம் கொலை பின்னணி பற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் இன்னும் பல தகவல் தெரியவந்தது.அதாவது 2021 ஆம் ஆண்டு மோகன் மற்றும் சசிகுமார் இருவரும் விஷம் கலந்த மதுவை குடித்துள்ளனர். இந்த சம்பவத்தில் மோகன் உயிரிழந்த நிலையில் சசிகுமார் உயிர் தப்பினார்.
இவர்களுக்கு மதுவை வாங்கி கொடுத்த குணசேகர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ஜாமினில் வெளிவந்த குணசேகரிடம் ஏன் இவ்வாறு செய்தாய்?.. என சசிகுமார் கேட்டுள்ளார். நான் ஒன்று கலக்கவில்லை , இது குறித்து தனக்கு ஒன்றும் தெரியாது என்று கூறியுள்ளார் குணசேகர். பின்னர் மதுவில் விஷம் கலந்தது ஜீவாதான் என தெரியவந்தது….இதனால் துரோகம் செய்த அவரை கொன்று பழி தீர்த்ததாக கூறினார்கள்.
0 Comments