சதுரகிரி கோவிலுக்கு செல்ல 5 நாட்கள் அனுமதி

 

விருதுநகர் மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையில் பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் சித்தர்களின் பூமியாக கருதப்படுகிறது. மேலும் சதுரகிரி மலைக்கு மாதம் தோறும் அம்மாவாசை, பௌர்ணமி நாட்களில் தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.

அதன்படி இந்த ஆண்டு வருகிற ஆகஸ்ட் 4-ம் தேதி ஆடி அமாவாசை நாள் ஆகும். இதனை முன்னிட்டு வருகிற 1-ஆம் தேதி முதல் 5-ஆம் தேதி வரை சதுரகிரி மலைக்கு சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு வனத்துறை அனுமதி அளித்துள்ளது. வழக்கமாக 4 நாட்கள் மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு வந்த நிலையில் ஆடி அமாவாசை முன்னிட்டு பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பக்தர்கள் தரிசனம் செய்ய ஏதுவாக இந்த முறை 5 நாட்கள் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments