என்கவுண்டர் செய்யப்பட்ட திருவேங்கடம் வங்கி கணக்கில் ரூ.50 லட்சம் செலுத்தியது யார்....? தமிழக அரசு வெளியிட என வேண்டும் வன்னியரசு வலியுறுத்தல்
பல்லாவரத்தில் பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலையை கண்டித்தும்,. வழக்கறிஞர்கள் பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக அமல்படுத்த கோரியும் பல்லாவரம் வழக்கறிஞர் சங்கம் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் 300க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டு ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் நீதி கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.முன்னதாக ஆம்ஸ்ட்ராங் திருவுருவப்படத்திற்கு மலர் தூவையும் மெழுகுவர்த்தி ஏந்தியும் வழக்கறிஞர்கள் நினைவஞ்சலி செலுத்தினர்.
ஆர்ப்பாட்டத்திற்கு சிறப்பு விருந்தினராக விடுதலை சிறுத்தை கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலாளர் வன்னியரசு கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய வன்னியரசு ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தற்போது அம்புகளை மட்டுமே போலீசார் கைது செய்துள்ளனர். அம்புகளை எய்தது யார் என தமிழக அரசு விசாரணை நடத்தி அவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். மேலும் இன்றைய சம்பவ நாளில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக என்கவுண்டர் செய்யப்பட்ட திருவேங்கடம் வங்கிக் கணக்கில் 50 லட்சம் செலுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
இந்த பணம் யாருடைய பணம், யாருடைய பணம் திருவேங்கடம் கணக்கிற்கு சென்றது, என்பது குறித்த முழுமையான விவரங்களையும் தமிழக அரசு வெளியிட வேண்டுமென வேண்டுகோள் விடுத்தார். அதேபோல் தமிழகத்தில் வழக்கறிஞர் பாதுகாப்பு சட்டத்தையும் தமிழக அரசு உடனடியாக அமல்படுத்த வேண்டும் எனவும் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தார். ஆர்ப்பாட்டத்தில் பல்லாவரம் வழக்கறிஞர் சங்க தலைவர் மணி மாறன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
No comments