*குறியீடு உள்ள ரூ.500 நோட்டுகள் செல்லாதா...?PIB Fact Check விளக்கம்
உங்களிடம் 500 ரூபாய் நோட்டு இருந்தால் இந்த செய்தி உங்களுக்கு மிகவும் முக்கியமானது. ஏனென்றால் 500 ரூபாய் நோட்டுகளில் சில நோட்டுகள் செல்லாது என்ற சமூக வலைத்தளங்களில் செய்தி பரவிக் கொண்டிருக்கிறது.
அதாவது 500 ரூபாய் நோட்டுகளின் எண் வரிசையில் நட்சத்திர குறியீடு இருந்தால் அது செல்லாது என்ற செய்தி வாட்ஸ் அப்பில் பரவி வருகின்றது.மக்கள் மத்தியில் இந்த செய்தி கவலையை ஏற்படுத்தி உள்ள நிலையில் மத்திய அரசின் உண்மை சரிபார்ப்பு பிரிவான PIB Fact check, சமீபத்தில் சமூக ஊடகங்களில் பரவி வரும் 500 ரூபாய் நோட்டுக்களை பற்றிய போலி செய்திகளை நம்ப வேண்டாம் என்று பொது மக்களை எச்சரித்துள்ளது.
இது பொய்யான தகவல் எனவும் கூறியுள்ளது. மேலும் 2016 ஆம் ஆண்டு முதல் நட்சத்திர குறியீடு கொண்ட 500 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருப்பதாகவும் பொய் செய்திகளை பரப்ப வேண்டாம் எனவும் கேட்டுக் கொண்டுள்ளது.
No comments