சிவகங்கை அருகில் உள்ள சமத்துவபுரத்தில் சவரத் தொழிலாளி முத்துக்குமார் என்ற கண்ணன் வசித்து வருகிறார். கடந்த 2019 ஆம் ஆண்டு இவரது கடைக்கு முடி திருத்தம் செய்ய வந்த அப்பகுதியை சேர்ந்த 5 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.
இது குறித்து சிறுமியின் தந்தை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் இது தொடர்பான வழக்கு சிவகங்கை போக்ஸோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இவ்வழக்கில் குற்றவாளி முத்துக்குமாருக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தும், மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு ஒரு லட்சம் ரூபாய் நிவாரண வழங்கவும் நீதிபதி கோகுல் முருகன் உத்தரவிட்டார்.
0 Comments