• Breaking News

    பயணிகள் இல்லை..... சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் 4 விமானங்கள் ரத்து

     

    சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில், போதிய பயணிகள் இல்லாததால் 4 விமானங்கள் இன்று ரத்து செய்யப்பட்டன. அதன்படி , போதிய பயணிகள் இல்லாத காரணத்தால், சென்னையில் இருந்து டெல்லி, அயோத்தி செல்லும் 4 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

    காலை 8.35க்கு அயோத்திக்கு செல்ல வேண்டிய விமானம், இரவு 8.55 மணிக்கு டெல்லி செல்லும் விமானத்தின் புறப்பாடு ரத்து செய்யப்பட்டது. இதில் பயணம் செய்வதற்காக முன்பதிவு செய்திருந்த ஒரு சில பயணிகள் மாற்று விமானங்களுக்கும், வேறு தேதிக்கும் மாற்றிவிடப்பட்டதாக விமான நிலைய அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

    No comments