• Breaking News

    தமிழகத்தில் 4 மாவட்டங்களில் டெங்கு அதிகரிப்பு

     

    தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களிலும் பரவலாக டெங்கு பாதிப்பு என்பது அதிகரித்த வண்ணம் உள்ளது. டெங்கு பாதிப்பை கட்டுப்படுத்த அரசு பலகட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் சென்னை, மதுரை, நெல்லை மற்றும் தஞ்சாவூர் ஆகிய நான்கு மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

    மழைக்கால சிறப்பு மருத்துவ முகாமை இன்று சென்னையில் தொடங்கி வைத்த பிறகு பேசிய அமைச்சர், இந்த ஆண்டு 6565 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 22,384 தற்காலிக பணியாளர்கள் கொசு ஒழிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் திருநெல்வேலி, திருப்பத்தூர், தேனி மற்றும் மதுரை உள்ளிட்ட பகுதிகளிலும் டெங்கு பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளதாக கூறியுள்ளார். எனவே மக்கள் சற்று எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    No comments