• Breaking News

    ஒகேனக்கல்லில் பரிசல் இயக்க 4-வது நாளாக தடை

     

    தொடர் நீர்வரத்து காரணமாக ஒகேனக்கல்லில் பரிசல் இயக்க 4-வது நாளாக தடை விதிக்கபப்ட்டுள்ளது. கர்நாடகா மாநிலத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக, கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணையிலிருந்து நீர் அதிக அளவு காவிரியில் திறந்து விடப்பட்டுள்ளது. கபினி அணையிலிருந்து கடந்த சில தினங்களுக்கு முன்பு தான், உபரி நீராக காவிரி ஆற்றில் 40 ஆயிரம் கன அடி வரை தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

    தற்போது, அணைகளில் திறந்துவிடப்பட்ட நீர் நள்ளிரவு முதல் ஒகேனக்கல்லில் அதிகரிக்க தொடங்கியுள்ளது. ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 45,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. நேற்று மாலை வினாடிக்கு 35,200 கனஅடியாக இருந்த நீர்வரத்து தற்போது 45,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. தொடர் நீர்வரத்து காரணமாக ஒகேனக்கல்லில் பரிசல் இயக்க 4-வது நாளாக தடை விதிக்கபப்ட்டுள்ளது. அருவி மற்றும் மாற்றுப் பகுதியில் குளிக்கவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.

    No comments