மீஞ்சூர் வட்டார வளர்ச்சி ஒன்றிய கூட்டத்தில் 4-ஆம் ஆண்டு சாதனை புத்தகத்தை வெளியிட்டார் சேர்மன் ரவி
திருவள்ளூர் மாவட்டம்,மீஞ்சூர் ஒன்றியத்தில் மாதாந்திர ஒன்றிய குழு கூட்டம் பெருந்தலைவர் அத்திப்பட்டு ஜி. ரவி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நட்ராஜ்,குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் நடைபெற்று முடிந்த பல்வேறு திட்ட பணிகள் குறித்து விவாதம் நடைபெற்றது. இன்னும் இரண்டு கூட்டங்களே மீதமுள்ள நிலையில் மீதமுள்ள பணிகளை முடிப்பதற்கு திட்டமிடப்பட்டது.கூட்டத்தில் மீண்டெழுந்த மீஞ்சூர் ஒன்றியம் எனும் தலைப்பில் ஒன்றிய குழு உறுப்பினர்கள் தங்கள் பகுதிகளில் பணியாற்றிய நான்காண்டு கால சாதனைகள் குறித்து புத்தகம் இயற்றப்பட்டு அதனை மீஞ்சூர் ஒன்றிய குழு பெருந்தலைவர் அத்திப்பட்டு ஜி. ரவி வெளியிட்டார்.
இதனை ஒன்றிய குழு துணை பெருந்தலைவர் தமிழ் செல்வி பூமிநாதன்,மாவட்ட கவுன்சிலர் தேசராணி தேசப்பன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர். கூட்டத்தில் ஒன்றிய குழு உறுப்பினர்கள் அன்பு,பானுபிரசாத், சகாதேவன்,காண்டீபன்,கதிரவன்,சுமித்ரா குமார்,ராஜேஷ் எனும் வெற்றி, செல்வழகி எர்ணாவூரான்,எம்.கே.தமின்சா,கிருஷ்ண பிரியா வினோத்,ரமேஷ்,ராஜா,மகாலட்சுமி பிரகாசம்,ஜமுனா ரஜினி,மாதவி தன்சிங்,தனலட்சுமி கடலி,சங்கீதா அன்பழகன்,நந்தினி,பிரவீனா சங்கர் ராஜா மற்றும் அரசு துறை அதிகாரிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
No comments