வங்காளதேசத்தில் சிக்கிய 44 தமிழர்கள் மீட்பு
வங்காள தேசத்தில் சுதந்திரப் போராட்ட தியாகிகளின் வாரிசுகளுக்கு 30 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று அறிவித்ததால் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டம் வன்முறையாக மாறிய நிலையில் 130 பேர் உயிரிழந்தனர். இதனால் அங்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் தற்போது உச்ச நீதிமன்றம் சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுகளுக்கு வழங்கப்பட்ட 30 சதவீத இட ஒதுக்கிடை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் வங்காள தேசத்தில் சிக்கிய 1000 மாணவர்கள் இந்தியா திரும்பிய நிலையில் அங்குள்ள தமிழர்களை மீட்கும் முயற்சியில் தமிழக அரசு ஈடுபட்டுள்ளது. அந்த வகையில் இன்று இரவு விமான மூலமாக 44 தமிழர்கள் சென்னைக்கு வருகிறார்கள். மேலும் இங்கிருந்து அவர்கள் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். மேலும் முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தலின் பேரில் இந்திய தூதரகத்தின் உதவியோடு தமிழர்களை மீட்க நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்துள்ளார்.
No comments