செய்யாத கொலைக்கு 43 வருடம் சிறை தண்டனை.... நடந்தது என்ன...?
அமெரிக்க நாட்டைச் சேர்ந்தவர் பாட்ரிசியா ஜெஷ்கே. இவர் ஒரு நூலகத்தில் பணிபுரிந்து வந்த நிலையில் கடந்த 1980 ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் சான்டா ஹெம்மி என்பவர் கைது செய்யப்பட்டார். அப்போது அவருக்கு வயது 20. ஆனால் அவர் எந்த குற்றமும் செய்யவில்லை. இருப்பினும் இந்த வழக்கில் அவருக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டது. இதனால் கிட்டத்தட்ட 43 வருடங்கள் சிறை தண்டனையை அனுபவித்தார். இவருக்கு தற்போது வயது 64 ஆகும் நிலையில் தண்டனை ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் கடந்த 19ஆம் தேதி அவர் சிறையில் இருந்து வெளியே வந்த நிலையில் குடும்பத்துடன் இணைந்தார்.
அதாவது இந்த கொலை வழக்கில் அவருக்கு எந்த சம்பந்தமும் இல்லை என்பதற்கான ஆதாரம் இருப்பதாக அவர் தரப்பு வழக்கறிஞர்கள் கூறியுள்ளனர். அவர் கைது செய்யப்பட்ட சமயத்தில் அவருக்கு மனநல பாதிப்பு இருந்ததால் அதற்காக ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அப்போது அவர் மயக்கமான நிலையில் இருந்த போது கட்டாயப்படுத்தி வாக்குமூலம் வாங்கியதாக வழக்கறிஞர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் இந்த கொலையை அவர் தான் செய்ததற்கான எந்த ஆதாரமும் இல்லாத நிலையில் அவருக்கு சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளதாக வழக்கறிஞர் தரப்பு கூறியுள்ளது. மேலும் அமெரிக்க வரலாற்றில் செய்யாத குற்றத்திற்காக அதிக வருடம் தண்டனை அனுபவித்தவர் இவர்தான் என்று கூறப்படுகிறது.
No comments