ஜிபிஎஸ் முறையில் பட்டா.... 4 மாவட்டங்களில் அமலாகிறது
புவிசார் தகவல்களுடன் ஜிபிஎஸ் முறையில் நிலங்களின் உட்பிரிவு பட்டா வழங்குவதற்கான புதிய திட்டம் விரைவில் அமலாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பட்டா பெறுவதில் உள்ள சிரமங்களை தடுப்பதற்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக நிலத்தின் ஒரு பகுதியை விற்பனை செய்வோர் சர்வேயர் மூலமாக முன்கூட்டியே அளந்து உட்பிரிவு செய்ய வேண்டும். இதன் அடிப்படையில் பத்திரப்பதிவு முடிந்ததும் தானியங்கி முறையில் பட்டா பெயர் மாற்றம் செய்யப்படும்.
இந்த திட்டத்தை முறையாக செயல்படுத்துவதில் பல தலையீடுகள் ஏற்படுவதாக கூறப்படுவதால் புதிதாக வழங்கப்படும் பட்டாவில் சொத்து குறித்த விவரங்களை துல்லியமாக குறிப்பிட வருவாய் துறை முடிவு செய்துள்ளது. இந்த நிலையில் நிலத்தின் ஒரு பகுதியை விற்பனை செய்பவர்கள் சர்வேயர் மூலமாக முன்கூட்டியே அளந்து உட்பிரிவு செய்யும் வகையில் அந்த நிலத்தின் ஜிபிஎஸ் எனப்படும் புவிசார் தகவல்கள் சேர்க்கப்படும். முதல் கட்டமாக இந்த புதிய திட்டம் விருதுநகர், நாமக்கல், பெரம்பலூர் மற்றும் ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் செயல்படுத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments