• Breaking News

    கணவர் மீது வெந்நீரை ஊற்றிய கொடூரம்.... மனைவி உட்பட 3 பேர் கைது

     

    மதுரை மாவட்டத்தில் உள்ள உலகாணி கிராமத்தில் கருப்பு (32) என்பவர் வசித்து வருகிறார். இவர் லாரி ஓட்டுனராக வேலை பார்க்கிறார். இவருக்கு ஜோதிமணி (28) என்ற மனைவி இருக்கிறார். இதில் கடந்த சில வருடங்களுக்கு முன்பாக கருப்புவுக்கு ஒரு விபத்து ஏற்பட்டதால் காலில் முறிவு ஏற்பட்டது. இதனால் அவர் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருக்கும் நிலையில் அவருடைய மனைவி தான் வேலைக்கு சென்று வருகிறார். இவர்களுடன் ஜோதி மணியின் பெற்றோரும்  வசித்து வரும் நிலையில் அடிக்கடி குடும்பத்த தகராறு ஏற்பட்டுள்ளது.

    இதேபோன்று நேற்று முன்தினமும் குடும்ப தகராறு ஏற்பட்டது. அப்போது மாமனார், மாமியார் மற்றும் கருப்புவுக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த மாமனார், மாமியார் மற்றும் அவருடைய மனைவி மூவரும் சேர்ந்து கருப்பு மீது கொதிக்கும் வெந்நீரை‌ ஊற்றியுள்ளனர். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் அவர் கொடுத்த புகாரின் பேரில் மாமனார் முருகன், அவருடைய மனைவி மாணிக்கவள்ளி  மற்றும் ஜோதிமணி ஆகிய 3 பேரையும் காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.

    No comments